ஒன்றிய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

டெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆதரவு திரட்டி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றார். அந்த வகையில் நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கெஜ்ரிவால்ஏற்கனவே ஆதரவு கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. முதலமைச்சரை நாளை சந்திக்கும் நிலையில், மநீம தலைவர் கமலையும் கெஜ்ரிவால் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குபதிவு

சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு