மதுபான கொள்கை ஊழல் வழக்கு: ஆம்ஆத்மி எம்பியின் உதவியாளர்கள் வீட்டில் ரெய்டு

புதுடெல்லி: ெடல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய எம்பி சஞ்சய் சிங்கின் உதவியாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாவும், இதனால் மாநில கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து இன்று எம்பி சஞ்சய் சிங்கின் நெருங்கிய உதவியாளர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

குறிப்பாக சஞ்சய் சிங்கின் நெருங்கிய உதவியாளரான அஜித் தியாகியின் வீடு மற்றும் அலுவலகம், சில தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், ‘மதுபானக் கொள்கையில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒன்றிய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது’ என்றார். மேற்கண்ட வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்