கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் 40% கமிஷன்: ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு அறிக்கை

பெங்களூரு: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்கு பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன. கர்நாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும். கர்நாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடக பாஜக அரசை 40% கமிஷன் அரசு என்று காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவுக்கு எதிரான முக்கிய விமர்சனங்களாக 40% கமிஷன் குற்றச்சாட்டு இடம்பெற்றது. நாளை கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் 40% கமிஷனை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related posts

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!