மூணாறில் சுற்றுச்சூழல் தினம்

 

மூணாறு, ஜூன் 6: கேரளமாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்று சூழல் தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மூணாறு ஊராட்சி சார்பில் மூணாறு நகரின் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, பல இடங்களிலும் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. மூணாறு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை மூணாறு ஊராட்சி தலைவர் பிரவீணா ரவிக்குமார் மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார்.

மேலும் தேவிகுளம் பகுதியில் தாலுகா சட்டப்பணிக்குழு தலைமையில் நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சிராஜூதீன் மரக்கன்று நட்டு தூய்மைப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் மூணாறு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தாலுகா சட்டக்குழு தலைமையில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து பழைய மூணாறு கே.எஸ்.ஆர்.டி.சி. நிலையம் அருகே உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.மேலும் பல பள்ளிகளில் மற்றும் எக்கோ பாயின்ட் உட்பட உள்ள பகுதிகளில் துப்பரவு பணிகள் நடத்தப்பட்டது.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி