பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், ஏப்.4: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர், உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தன. தொடர்ந்து திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்புறத்தை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல் சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் கோயிலின் வெளிபகுதியில் நான்கு அடி உயர நந்தி சிலைக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், பன்னீர் வாசனை திரவியங்கள், பழச்சாறுகள் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பக்தர்கள் காட்சியளித்தார். தொடர்ந்து சுயம்பரகேரஸ்வரர் சுவாமிக்கு வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் கோவிலை வலம் வந்தார்.

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு