குறிப்பிட்ட சமுதாயம் புறக்கணிப்பு கோயில் கல்வெட்டை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் போலீசில் புகார்

இளையான்குடி, ஏப்.4: இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் வரகுணேஸ்வரர் கோயிலில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இந்த கோயில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்தது. அதனால் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சாலைக்கிராமம் பெரிய கண்மாய் கருவேல மரத்தை ஏலம் விட்டு ரூ.68 லட்சத்து 24 ஆயிரத்தில் கோயில் புதிய ராஜகோபுரம் கட்டுமானத்திற்கும் மற்றும் புதிய தேர் செய்வதற்கும் செலவிடப்பட்டது. கடந்த வருடம் செப்.8ம் தேதி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழா துவங்கும் நிலையில் கோயில் கோபுரம் கட்டியதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை புறக்கணித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும், கல்வெட்டை மறைக்கவோ, அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், பிச்சங்குறிச்சி ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று சாலைக்கிராமம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்