நாமக்கல்லில் 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்!

நாமக்கல்: நாமக்கல்லில் 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெட்ரோல் கேனுடன் இளைஞர் சுரேஷ் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் என இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில், சுரேஷ் மீது ஏற்கனவே 15க்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின் செல்போன் கோபுரத்தில் இருந்து போலீசார் இளைஞரை கீழே இறக்கியுள்ளனர்.

Related posts

சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே

பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி