விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூடுதல் அலுவலர்களை நியமித்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும். VVPAT-ல் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் தற்போது 5% மட்டுமே எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது. விவிபேட் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும். ஏ.டி.ஆர். அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

 

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை