TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஊழல் தடுப்பு சட்ட பிரிவின்படி தேர்வாணைய தலைவர், உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் என்பதால் ,தேர்வாணைய விதிகளில் திருத்தம் தன்னிச்சையானது என கூற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

கர்நாடகாவில் ஹார்டுவேர் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து

ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு