திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 78,818 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.66 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்!

பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!

தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு