தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் நாராயணசாமியை நியமித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமிக்கு ஆளுநர் ஆர்.ரன்.ரவி பணி நியமன ஆணையை வழங்கினார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக கே.நாராயணசாமி பணியாற்றி வருகிறார்.

சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராகவும் டாக்டர் நாராயணசாமி பணியாற்றி உள்ளார். மருத்துவ துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவமும் 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவர் கே.நாராயணசாமி. 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் துறை இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக தமிழ்நாடு அரசிடம் நாராயணசாமி விருது பெற்றுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு