திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4.91 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று 68 ஆயிரத்து 563 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21 ஆயிரத்து 956 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.91 கோடி காணிக்கையாக கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 8 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Related posts

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு‘கள்ள மவுனம்’ கைவந்த கலை: துரைமுருகன் காட்டமான பதில்

செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்