திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது..!!

ஆந்திரா: திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள்  உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் குழுவாக கடப்பா மாவட்டம் வாணிபெண்டா வனச்சரகத்திற்குட்பட்ட திப்பிரெட்டிபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ​​சிலர் தோளிலும், தலையிலும் செம்மரக்கட்டைகளை சுமந்து கொண்டு சென்று கொண்டுருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார், அந்த பகுதியில் இருந்த மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17 செம்மரக் கட்டைகள், ஒரு சரக்கு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், பிடி இல்லாத 13 இரும்பு கோடாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்கள் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை அன்னமய்யா மாவட்டம் மோளையனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், குடத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவமணி ஆகியோரை கைது செய்து. அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இருவேறு வழக்குகளில் மொத்தம் 16 கடத்தல்காரர்களிடமிருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்தனர்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு