சூடானில் இருந்து இந்தியரை மீட்டதற்கு நன்றி; சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்றிரவு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத்திடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்பதற்காக, சவுதி அரேபியா பல வகைகளிலும் உதவியது. அதற்காக பிரதமர் மோடி, வுதி இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத்திடம் தொலைபேசியில் பேசி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்திய பயணிகளின் ஹஜ் யாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொலைபேசி உரையாடலின் போது, ​​இரு தலைவர்களும் இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால், அந்நாட்டில் வசித்த இந்தியர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகினர். அதனால் அவர்களை ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தின் கீழ், சவுதி வழியாக இந்தியா வரவழைக்கப்பட்டது. அதனால், சவுதி இளவரசரிடம் பிரதமர் மோடி பேசி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related posts

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது