பணிசார் கோரிக்கைகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் சிறப்பாக நடைபெறவும், அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனுக்குடன் சென்றடையவும், தரமான கல்வியை பெற்றிடவும், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, தனியார் பள்ளிகள்) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் என 3 நிலை அலுவலர்களை கொண்ட நிர்வாக கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கள அளவிலான இத்துறையின் செயல்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விடுப்பு ஒப்பளிப்பு, ஊதியம், ஊக்க ஊதியம், பதவி உயர்வு, பணியிட மாறுதல், பதவி உயர்விற்கான, தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கான ஊதிய நிர்ணயம் மற்றும் பணியில் இளையோருக்கு இணையாக மூத்தவரது ஊதியத்தை சமன் செய்தல்,

ஓய்வூதிய பலன்கள் போன்ற பல்வேறு பணிசார் கோரிக்கைகளை உரிய அலுவலருக்கு கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் நுழைவு குறியீட்டை (லாகின் ஐடி) உபயோகித்து இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தாமதமின்றி தீர்வு பெறவும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்திற்காகவும் எமிஸ்(EMIS) தளத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

வெங்காயம் பதப்படுத்துதலை அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு