தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

டெல்லி: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளது; பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2 வது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 25,000 பேர் பங்கேற்பு, கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதி

தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்