தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 2553 டாக்டர்கள்

பணி: Assistant Surgeon (General): மொத்த காலியிடங்கள்: 2553.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது: 01.07.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்தியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம்/சீர்மரபினர் ஆகியோர் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 47 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பை முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தால் (TNMRB) நடத்தப்படும் தமிழ்மொழி திறனறியும் தேர்வும் (Tamil Language Elegibility Test) மற்றும் பொது அறிவு, மருத்துவக் கல்வித்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.தமிழ்மொழி திறனறியும் தேர்வில் 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையிலும், இதர தேர்வுகளில் எம்பிபிஎஸ் கல்வித்தகுதி அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. எஸ்சி/
அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2024.

 

Related posts

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு