வெயிலால் மயங்கி விழுந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர்: போலீசார் வலைவீச்சு

ஈரோடு: வெயிலில் கம்பெனி முன்பு மயங்கி விழுந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர் மீது போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி, சமத்துவபுரம் காலனியைச் சேர்ந்தவர் சித்ரா (39). கூலி தொழிலாளி. இவர் பூதப்பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி நுழைவாயிலில் வெயில் காரணமாக திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.

இதைக்கண்ட ஹாரோ பிரிக்ஸ் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான கவின், மயக்க நிலையில் இருந்த சித்ராவை, தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில், காயமடைந்த சித்ரா அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கூலித் தொழிலாளியை தாக்கிய கவின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எஸ்சி. எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரான கவினை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!