ssசாலையை சீரமைக்க கோரி மனு

 

மதுரை, ஏப்.26: மதுரை கே.புதூர் சர்வேயர் காலனி பாண்டி நகர் 2வது தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரராஜ் உள்ளிட்ட பலர், மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். மனுவில், மதுரை ேக.புதூர் ஜவகர்புரத்தில் இருந்து பிரிந்து செல்லும் புதூர் வண்டிப்பாதை வழியாக ரிசர்வ் லைனுக்கு செல்லும் மெயின் ரோட்டில் 30க்கும் மேற்பட்ட பெரிய ஆழமான பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளன. அதேபோல், இந்த ரோட்டின் நடுவில் 10க்கும் ேமற்பட்ட பாதாள சாக்கடை தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிக்கு வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு வெட்டப்பட்ட இடத்தில் ரோட்டில் பள்ளங்களாக உள்ளன. இதனால் இந்த ரோட்டில் வாகனங்களும், பொதுமக்களும் பயணம் செய்ய மிகச்சிரமமாக உள்ளது. அதில் விபத்துக்களும் நடக்கின்றன. எனவே, மிக மோசமான, பயன்படுத்த முடியாத இந்த ரோட்டை பொதுமக்கள் நலன் கருதி, மாநகராட்சி உடனடியாக செப்பனிட உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்னர்.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி