தனிநபர் வழக்கு தொடர்ந்தவரை பொய் வழக்கில் கைது செய்த இன்ஸ்பெக்டர்: துறைரீதியாக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை, ஏப். 26: தனிநபர் வழக்கு தொடர்ந்தவரை பொய் வழக்கில் கைது செய்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்மண்டல ஐஜிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் 21 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், கடந்த மார்ச் 7ல் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் வந்து அழைத்துச் சென்றனர். போலீசாருக்கு எதிரான தனிநபர் வழக்கை திரும்ப பெற ேவண்டுமென கூறினர். ஒத்துக்கொள்ளாததால் கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர் என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனிநபர் வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் மனுதாரரை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். மனுதாரர் மீது பல லாட்டரி வழக்குகள் உள்ளன. இதில், பெரும்பாலான வழக்கில் விடுதலை ஆகியுள்ளார். எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தினசரி ஆஜராகி 4 வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட போலீசார் மீது தென்மண்டல ஐஜி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் மதுரை ஜேஎம் 5 நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு