அமேதி வளர்ச்சியடையவில்லை: தொகுதி எம்.பியான ஒன்றியஅமைச்சர் ஸ்மிருதி இரானி சொல்கிறார்

அமேதி: உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதிக்குட்பட்ட பாண்டேகஞ்ச் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் மற்றும் அமேதி தொகுதி எம்பியான ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘தொகுதியின் எம்பியை சந்திப்பதற்கு மக்கள் டெல்லிக்கு சென்றதை அமேதி பார்த்துள்ளது. அந்த நேரத்தில் எம்பி வெளிநாட்டில் இருப்பார் அல்லது அவரது பாதுகாவலர்கள் அவரை சந்திப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

காந்தியின் குடும்பம் 50 ஆண்டுகளாக அமேதியின் வளர்ச்சியை தடுத்து வைத்திருந்தனர். அப்போது தான் இங்குள்ள மக்கள் ஏழைகளாகவே இருப்பார்கள், உதவியின்றி மற்றும் அவர்கள் முன் கைகூப்பி மன்றாடுவார்கள். அவர்களது சிந்தனையின் பலனாக அமேதியில் 1.08லட்சம் குடும்பங்களுக்கு வீடு இல்லை,. 4லட்சம் பேருக்கு குடிநீர் குழாய் இல்லை, 3லட்சம் குடும்பங்களுக்கு கழிவறை இல்லை” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருக்கும் ஸ்மிருதி இரானி தனது சாதனைகள் என்று எதையுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்

வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு