பாலியல் தொல்லை விஏஓக்கள் கைது

சென்னை: ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண், திருமணமாகி கணவர் மற்றும் 3 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு விஏஓ முருகேசன் (55), அறிமுகமாகி உள்ளார். இவர், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சான்றிதழ் கேட்டு, அவரது வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, பொலவபாளையத்தில் தனது வீட்டு குளியலறையில் பதுங்கி இருந்த விஏஓ முருகேசனை கைது செய்தனர். இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் விஏஓவாக உள்ள ஒருவர் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து, தனது 15 வயது மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புகாரின்பேரில் விஏஓ கைது செய்யப்பட்டார்.

Related posts

அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன் பேட்டி

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்