உதவி பேராசிரியர் பணிக்கு ‘செட்’ தேர்வு அறிவிப்பு

தேர்வு: TNSET- 2024. தகுதி: கலை/அறிவியல்/மேலாண்மையியல்/பொருளாதாரம்/மானுடவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வு நடந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை தேவையான மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் பாடப்பிரிவுகள் விவரம்:

Anthropology/ Arabic/Archaeology/Chemical Sciences/Commerce/Computer Science and applications/Criminology/ Defence and Strategic Studies/Earth Sciences/Economics/Education/Electronic Science/English/ Environmental Sciences/ Geography/Hindi/History/Home Science/ Laboru Welfare/Personnel Management/Industrial Relations/Labour and Social Welfare/Human Resource Management/Law/Library and Information Science/Life Sciences/Malayalam/Management/ Mass Communication and Journalism/Mathematical Sciences/ Music/ Performing Art/Philosophy/ Physical Education/Physical Sciences/Psychology/ Public Administration/ Sanskrit/ Social Work/Sociology/Tamil/Telugu/Tourism Administration and Management/Urdu/Visual Art/Women Studies எஸ்சி/எஸ்டி/அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் டிஎன்செட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: யுஜிசி விதிமுறைப்படி வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் முறை: தேர்வு 2 தாள்களை கொண்டது. தாள்-1ல் விண்ணப்பதாரரின் கற்பிக்கும் திறனை பரிசோதிக்கும் வகையில் 50 கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு எழுத ஒரு மணி நேரம் தரப்படும். தாள்-2ல் விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு எழுத 2 மணி நேரம் தரப்படும். தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டில் நடந்த தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் ஆகியவை யுஜிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: பொது பிரிவினர்கள் ரூ.2,500/-. பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீர் மரபினருக்கு ரூ.2,000/-. எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800/-. திருநங்கைகளுக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.msuni.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2024.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு