பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டி கொடுக்கக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்கக் கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புருசோத்தமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அவற்றை ஆசிரியர்களின் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. ஆசியர்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதோடு, வசூலிக்கப்படும் கட்டணத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புக்களை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், ஆசிரியர்கள் குடியிருப்புகள் கட்ட தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்கவும், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு