அமெரிக்கா, ஜப்பான், சீனாவில் இலவசத்தால் பொருளாதார நெருக்கடி: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கருத்து

மும்பை: இலவசங்களுக்கு செலவழித்த நாடுகள் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பாஜ ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கொரோனா தொற்று காலத்தில் இலவச திட்டங்களுக்காக அதிக பணத்தை செலவழித்த அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் அந்த காலகட்டத்தில் , இந்தியா உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட பிற துறைகளை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அறிவித்தது. மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த மகா விகாஸ் அகாடி அரசு முழுமையான ஊழல் அரசு. உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி ஒன்றிய அரசின் அனைத்து நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ் ஆட்சியில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Related posts

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்