கள்ளச்சாராய உயிர் பலி இனி நிகழவே கூடாது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்

சென்னை: கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாரயம் அருந்தி, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தக்க சிகிச்சை மேற்கொள்ள ஆணையிட்டு உள்ளது ஆறுதல் தருகிறது. அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்