அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் 454 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு சேர்ந்த 454 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கால்நடை பராமரிப்புத்துறையில், அனைத்துத் தகுதிகளுடன் கால்நடை உதவி மருத்துவர்களாக 11 ஆண்டுகளாக பணி செய்யும் 454 பேருக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கு மாற்றாக, அவர்கள் அடுத்த தலைமுறை பட்டதாரிகளுடன் போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் பணியில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதி ஆகும். 40 வயதைக் கடந்து விட்ட அவர்களால், இப்போது வரும் இளம் பட்டதாரிகளுடன் போட்டியிட முடியாது. இப்போதுள்ள வயதில் அவர்களால் வேறு எந்த பணிக்கும் செல்ல முடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு பணியில் தொடரும் 454 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

Related posts

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்டவை கொள்ளை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிப்பு