ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம் : பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து!!

டெல்லி :நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு ராமநவமி வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் பிறந்த நாளாக ராம நவமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அயோத்திய ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு ராமநவமி வாழ்த்துகள். இந்த சந்தர்ப்பத்தில் என் இதயம் உணர்ச்சியாலும், நன்றியாலும் நிறைந்துள்ளது. 5 நூற்றாண்டுகள் காத்திருந்து இன்று அயோத்தியில் ராம நவமியை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நாட்டு மக்களின் பல வருட கடும் தவம், துறவு, தியாகத்தின் பலன்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி கொண்டாடுவது ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருந்த நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்,” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்