பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.. விருதுநகரில் கோவில் விழாவில் கும்மியடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்!!

விருதுநகர்: விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கும்மியடித்து வாக்கு சேகரித்தார். நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று மலையோடு இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் இன்று மக்களிடம் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராதிகா சரத்குமார், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி, அம்மாபட்டி, புதுசுரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ராதிகா சரத்குமார், அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அதனால் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். இதையடுத்து புதுச்சூரங்குடி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா, அப்பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அப்போது கும்மியடிக்கும் பெண்களுடன் ராதிகா சரத்குமாரும் சேர்ந்து கும்மியடித்து வாக்கு சேகரித்தார்.

 

 

Related posts

49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!