ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்துக்கு எச்சரிக்கை

சென்னை: கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.

அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts

குமரி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!!

தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுப்பு..!!

ஜெயக்குமார் மரணம்: 6 வது நாளாக விசாரணை தீவிரம்