புதுச்சேரியில் பரபரப்பு ஆடம்பர வாழ்க்கைக்காக விபசார தொழில் நடத்திய ரவுடி

* சொகுசு கார், 2 செல்போன் பறிமுதல்

* விசாரணையில் பகீர் தகவல்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆடம்பர வாழ்க்கைக்காக ரவுடி, விபசார தொழில் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொகுசு கார், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரி 29ம் தேதி முதலியார்பேட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அழகிகளை அடைத்து வைத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 வெளிமாநில அழகிகளை மீட்டனர். புதுச்சேரி சண்முகாபுரம் பாலாஜி (35) என்பவர், விபசாரத்துக்கு அழகிகளை அழைத்து வந்து, வாணரப்பேட்டை பிரபல ரவுடி அய்யப்பனிடம் ஒப்படைத்துள்ளார். அவர், வில்லியனூர் ஆரியபாளையம் அய்யப்பன் (எ) மணிகண்டன் (37) உதவியுடன் ஆன்லைன் மூலமாக அழகிகளின் புகைப்படங்களை அனுப்பி, வாடிக்கையாளர்களை மேற்கண்ட விடுதிக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து பாலாஜி, மணிகண்டன், விடுதி மேலாளரான கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடி முத்தமிழன் (30), வாடிக்கையாளர்களான உப்பளம் அவ்வை நகர் தினேஷ் (38), ரெட்டியார்பாளையம் சதாசாய் நகர் லோகேஷ் (25) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அழகிகளை விலைக்கு வாங்கி விபசார தொழில் நடத்திய ரவுடியான அய்யப்பன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் அய்யப்பன், கோவாவில் பதுங்கி இருப்பதாக புதுவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழு நேற்று முன்தினம் கோவாவுக்கு விரைந்து சென்று, அங்கு தலைமறைவாக இருந்த அய்யப்பனை சுற்றி வளைத்து கைது செய்தது.

தொடர்ந்து, நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி அழைத்து வந்தது. பின்னர், போலீசாரிடம் அய்யப்பன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு, விபச்சார விடுதியை தனது கூட்டாளிகளை வைத்து நடத்தி வந்ததும், சம்பந்தப்பட்ட அழகிகளுடன் அவரும் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அய்யப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அய்யப்பன் மீது ஏற்கனவே கொலை, வெடிபொருள், கொள்ளை உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரோட்டில் துணிகரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக திகழ்கிறது.! அரசு பெருமிதம்