முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு

பெங்களூரு : முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எச்.டி.ரேவண்ணா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். எச்.டி.ரேவண்ணா மீது வழக்கு பதிவுசெய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது