அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜூன் 22ல் உரை

வாஷிங்டன்: பிரதமர் மோடி அமெரிக்க கூட்டு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வரும் 22ம் தேதி உரையாற்ற உள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து உரையாற்ற உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு, அதிபர் பைடன் விருந்து கொடுக்கிறார். மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் ஜூன் 22ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்ற அவைத்தலைவர் கெவின் மெக்கார்த்தி, செனட் சபை தலைவர் சக் சூமர், செனட் குடியரசு கட்சி தலைவர் மிச் மெக்கோனல், செனட் ஜனநாயக கட்சி தலைவர் ஹக்கிம் ஷெப்ரீஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வேன் மோதியதில் தலைமைக் காவலர் உயிரிழப்பு