ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நாட்டில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு

டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நாட்டில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படியே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி நடத்தபடுகிறார்கள். அரசியல் அமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார். குற்றச்சாட்டை முன்வைக்கும் காங். எம்.பி. முதலில் வீட்டுப்பாடத்தை முறையாக படித்து வாருங்கள் என்றார். புதிய நாடாளுமன்ற திறப்பில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அழைக்கப்படாதது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தன்கர் பதில் அளித்தார்.

Related posts

மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!

ரூ.338.79 கோடி மதிப்பில் புளியஞ்சோலையில் 20 மெகாவாட் நீர்மின் நிலையம்