விடுதியில் தங்கியிருந்த மருத்துவ மாணவரிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட முதுகலை மாணவர்: குஜராத் கல்லூரியில் பரபரப்பு

ராஜ்கோட்: விடுதியில் தங்கியிருந்த மருத்துவ மாணவரிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட முதுகலை மாணவரால் குஜராத் மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் பாவ்நகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை எம்பிபிஎஸ் படிப்பு படிக்கும் மாணவர், அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அப்போது முதுகலை எம்.டி படிப்பு இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், எம்பிபிஎஸ் படிக்கும் மாணவரை தனது விடுதி அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த மாணவரும், முதுகலை மாணவரின் அறைக்கு சென்றார். அங்கு இளங்கலை மாணவரை பிடித்து, இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்த மாணவர், முதுகலை மாணவரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துவிட்டார். தனது அறைக்கு வந்து, நடந்த சம்பவத்தை தனது நண்பர்களிடம் கூறினார். அவர்களது ஆலோசனையின் பேரில், கல்லூரியின் டீன் எச்.பி.மேத்தாவிடம் இளங்கலை மாணவர் புகார் அளித்தார். இதுகுறித்து டீன் எச்.பி.மேத்தா கூறுகையில், ‘கடந்த 12ம் தேதி இரவு, இளங்கலை மாணவரை தனது விடுதிக்கு வருமாறு முதுகலை மாணவர் அழைத்து, இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய இளங்கலை மாணவர், அன்றிரவே எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் நிலம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முதுகலை மாணவர் மீது வழக்குபதிவு செய்யக் கோரி மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். இது குறித்து நிலம்பாக் காவல் நிலைய ஆய்வாளர் பி.டி.பர்மர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மற்றும் அவர்களது கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டனர்.

கடந்த 13ம் தேதி கல்லூரி டீனிடமிருந்து கடிதம் வந்தது. எப்ஐஆர் பதிவு செய்வது தொடர்பாக நேரில் வருமாறு கல்லூரி அதிகாரிகளுக்கு தகவல் ெதரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை’ என்றார். கல்லூரி தரப்பில் கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட இளங்கலை மாணவரின் பெற்றோர் டீனை அணுகியதாகவும், அவர்கள் வேறு கல்லூரிக்கு இடமாற்று சான்று கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்