காஞ்சிபுரத்தில் உள்ள பொன்னேரிக்கரை ஏரியை தூர்வாரி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் பேரவையில் எழிலரசன் எம்எல்ஏ கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பொன்னேரிக்கரை ஏரியை தூர்வாரி, நவீனப்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை விடுத்தார். அப்போது, அவர் பேசியதாவது கடந்த ஆட்சியின்போது காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும், காஞ்சியில் மருத்துவ கல்லூரி, தடுப்பணை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். கடந்த 2017ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது, தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, காலத்தை கடத்திவிட்டு சென்றுவிட்டனர். திமுக அரசின் திட்டங்களை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பாதையில் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதன்படி மகளிர் உரிமை திட்டம் மூலம் ஏழை, எளியவர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை, ஒர மாத மளிகை சாமான் வாங்கி கொள்ள கூடியவர்களுக்கு, ஒரு மாதத்தின் செலவினங்களை ஈடுகட்டுவதற்கு காத்திருக்கக் கூடிய ஏழை, எளிய பெண்களுக்காக உரிமைத் தொகையாய் இதை அங்கீகரிக்கும் வகையில் வழங்கக்கூடிய தொகை என்று சொல்லியிருக்கிறோம். இந்நிலையில், நகர்புற வளர்ச்சி நாகரிகத்தின் அடையாளம் என்பதோடு, ஊரக வளர்ச்சியும் மிக அவசியமானது. கிராமமும் சமநேரத்தில் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமத்தில் வசிக்க கூடியவர்கள், நகர்ப்புறத்திற்கு மாற வேண்டும் என்று நினைத்தால், நகரம் நெரிசல் நிறைந்து அசௌகரியமானதாக மாறிவிடும்.

எனவே, கிராமப்புறங்கள் வளர்ச்சியுற்றதாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் 1970களிலேயே அனைத்து கிராமத்திற்கு சாலையும், மின் இணைப்பையும் வழங்கிய உன்னத தலைவர் கலைஞர். அத்தகைய கலைஞரின் பெயரால் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 100 அறிவுசார் மையங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அறிவுசார் மையம் என்று பொதுவாக அழைக்கக்கூடிய இந்த மையங்களுக்கு, கலைஞர் கற்றல் மையம் என்று பெயர் சூட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும், காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட விஷார் கிராமாத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

பம்பை கால்வாய் முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தி, தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்த வேணன்டும். காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் தேரோடும் வீதிகளில் புதைவடக் கம்பிகள் அமைக்க வேண்டும். காஞ்சிபுரத்தின் முக்கிய புறவழிச்சாலையான செவிலிமேடு – கீழம்பி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும். மேலும், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லையை பிரித்து, 2 காவல் நிலையங்களாக அமைக்க வேண்டும். காஞ்சிபுரம், செவிலிமேடு, சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி ஏரிகளை ஆழப்படுத்தி சீரமைத்து, புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். மாநகரை ஒட்டி வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரியை நவீனப்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட முத்மை நீதிமன்ற கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். மஞ்சள் நீர் கால்வாயை மேம்படுத்த தொழில்நுட்ப அனுமதி வழங்க வேண்டும். காஞ்சிபுரம் தேரடி அருகில் ராஜாஜி மார்க்கெட், தாலுகா அலுவலகம், பச்சையப்பன் பள்ளி, பஸ் நிலையம் சிக்னல் அருகில், கச்சபேஸ்வரர் கோயில் சங்கர மடம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளி சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகில் எஸ்கலேட்டருடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு