தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7ம் தேதிக்கு பின், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

Related posts

ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை

பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி

கோத்தகிரியில் கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி