ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்; அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை

சென்னை: ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை என ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவு ரயிலின் எஸ்9 உட்பட அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி செயல்படும் நிலையிலேயே இருந்தது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பயணித்த கொல்லம் ரயிலின் அபாய சங்கிலிகளை ஆய்வு செய்தபின் தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் கொல்லம் விரைவு ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கிலி செயல்பட்டிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றியிருக்கலாம் என உறவினர்கள் கூறியிருந்தனர்.

Related posts

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது: வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியது: நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு‘கள்ள மவுனம்’ கைவந்த கலை: துரைமுருகன் காட்டமான பதில்

செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து