பாஸ்போர்ட்க்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை..!!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாஸ்போர்ட்க்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நடுக்காவேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பந்துருத்தியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் பெற்றதாக ஜார்ஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ்-க்கு ரூ.3,000-ம் அபராதமும் விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்