எதிர்கட்சிகள் குறித்து விமர்சித்த அயர்லாந்து தூதரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: அயர்லாந்து நாளிதழின் தலையங்கத்தில் பிரதமர் மோடி தனது பிடியை இறுக்குவதாகவும், எதிர்கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா, அயர்லாந்து நாளிதழின் தலையங்கம் ஒருபக்கம் சார்புடையதாக இருப்பதாக கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதள பக்கத்தில், ‘‘ எதிர்கட்சிகளை வெளிப்படையாக தாக்கி பேசும் செயலானது ஒரு தூதரிடம் இருந்து எதிர்பார்க்காத ஒன்று. உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு