தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப்பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related posts

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து சாலையோரம் உள்ள கிணற்றில் மோதி விபத்து

கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு