ஒடிசா ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரம்: ஒடிசா தலைமைச் செயலாளர்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரமாகியுள்ளனர் என்று ஒடிசா தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் 7 தேசிய மீட்பு குழு படையினர், 5 ஒடிசா மாநில மீட்பு குழு படையினர், 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து

கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு

மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு சிபிஐ, ஈடி பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு