மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தேசிய பெண்கள் கூட்டமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக 4 தேசிய பெண்கள் கூட்டமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, பாஜ எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் அரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் பாஜ எம்பி மீது கடந்த 28ம் தேதி 2 எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய பெண்கள் தேசி கூட்டமைப்பு, அனைத்து இந்திய பெண்கள் சமஸ்கிருத சங்கம், அனைத்து இந்திய அக்ரகாமி பெண்கள் சங்கம் ஆகிய 4 தேசிய பெண்கள் அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானப் போராட்டங்கள் நடத்தப்படும். பெண்களுக்கு எதிரான பாஜ.வின் மறுமுகத்தை வெளிப்படுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளன. லட்சக்கணக்கான பெண்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்..!!