ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போன வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: போதைப்பொருள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 70,000 கிலோ ஹெராயின் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குல் 4 வார காலத்துக்குள் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் சுமார் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யபட்டது. பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.

Related posts

KP.2 என்ற புதிய வகை கொரோனாவால் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!!

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி 23-ம் தேதி தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு