இஸ்லாமியர் என்று சொல்ல தூர்தர்ஷன் தடை: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

டெல்லி: இஸ்லாமியர் என்ற சொல்லை பயன்படுத்த அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தடை விதித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்லாமியர் என்பதற்கு பதில் மாற்று மதத்தினர் என பயன்படுத்த வற்புறுத்தியதாக சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார். வகுப்புவாத கட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சொற்களை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் தடை விதித்துள்ளதாகவும், கொடூர சட்டங்கள் என்ற சொல்லை பயன்படுத்தவும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி தடை விதித்ததாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். தூர்தர்ஷன் தடை விதித்த சொற்களை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தும் ஏற்கவில்லை என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.

Related posts

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!

சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம்