மஷ்ரூம் 65

தேவையான பொருட்கள்:

1 பாக்கெட் மஷ்ரூம்
2 மேசைக்கரண்டி கடலைமாவு
1 மேசைக்கரண்டி கான்ப்ளார்
2 மேசைக்கரண்டி அரிசிமாவு
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 ஸ்பூன் கரம் மசாலா
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
½ ஸ்பூன் சீரகத்தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 எலுமிச்சை சாறு
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

மஷ்ரூமை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, கான்ப்ளார், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும். இதில்எலுமிச்சைச் சாறு பிழிந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, சற்று கெட்டியாக கலந்து வைக்கவும். பின்பு இதில் மஷ்ரூம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மஷ்ரூமை உதிர்த்துப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் 65 தயார்.

 

Related posts

பருப்பு ரசம்

நுங்கு சர்பத்

நுங்கு ஸ்மூத்தி