மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1% க்கு மேல் உயர்ந்து முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்ந்து 74,643 புள்ளிகளானது. வர்த்தகம் நிறைவடையும் முன் சென்செக்ஸ் 990.99 புள்ளிகள் அதிகரித்து 74,721 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 223 புள்ளிகள் அதிகரித்து 22,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வர்த்தகம் நிறைவடையும் முன் நிஃப்டி 235.85 புள்ளிகள் உயர்ந்து 22,655.80 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 32 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின.

Related posts

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி