முக்கூருத்தி, சைலன்ட்வேலி தேசிய பூங்காக்களில் இரு மாநில வனத்துறையினர் கூட்டு ரோந்து

*அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை : வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி : முக்கூருத்தி மற்றும் சைலன்ட்வேலி தேசிய பூங்காவிற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு – கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில வனத்துறையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முக்கூருத்தி தேசிய பூங்கா 78.4 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு அழியும் பட்டியலில் உள்ள வரையாடுகள், புலிகள், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகளும்,புல்வெளிகளும் உள்ளன.

இப்பகுதி கேரளாவின் சைலன்ட்வேலி தேசிய பூங்கா உள்ளது. முக்கூருத்தி மற்றும் சைலன்ட்வேலி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்,அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கண்டறிய அடிக்கடி தமிழக – கேரள வனத்துறையினர் இணைந்து அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கூருத்தி வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையிலும்,சைலன்ட்வேலி தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் வினோத் தலைமையில் இரு மாநில வன ஊழியர்கள் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொண்டனர்.

தொடர்ச்சியாக கூட்டு ரோந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,முக்கூருத்தி தேசிய பூங்கா மற்றும் சைலன்ட்வேலி வனப்பகுதிகளில் அத்துமீறி அந்நியர்கள், தனி நபர்கள் நுழைந்தால் வன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயன் : தமிழக அரசு தகவல்!!

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு: குண்டர் சட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது