ஆப்கானிஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. அப்கானிஸ்தானில் பூமிக்கு அடியில் 124 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related posts

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை