எம்ஜி ஹெக்டார் ஷைன் புரோ

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது ஹெக்டார் காரில் புதிதாக ஷைன் புரோ மற்றும் செலக்ட் புரோ என்ற 2 வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. வெளிப்புற தோற்றத்திலும், இன்ஜின் திறனிலும் மாற்றமில்லை. இந்த கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என 2 தேர்வுகளில் கிடைக்கும். 14 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்சிடி ஸ்கிரீன் இடம் பெற்றுள்ளன. குரூஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஸ்மார்ட் கீயுடன் கூடிய புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் , புளூடூத் கி ஷேரிங் தொழில்நுட்பம், சன்ரூப் உள்ளன. செலக்ட் புரோவில் டூயல் பேனல் பனோரமிக் சன்ரூப், ஷைன் புரோவில் சிங்கிள் பேனல் சன்ரூப் இடம் பெற்றிருக்கும். வேரியண்ட்களுக்கு ஏற்ப சில வசதிகள் மாறுபடும்.ஷோரூம் விலையாக ஷைன் புரோ வேரியண்ட் சுமார் ரூ.16 லட்சம் எனவும், செலக்ட் புரோ வேரியண்ட் சுமார் ரூ.17.3 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே சந்தையில் உள்ள எஸ் (ஓ) டர்போ எம்டிக்கு கீழ் உள்ள மாடலாக உள்ளது. இதனால் அதனை விட ஷோரூம் விலை சுமார் ரூ.40,000 குறைவு.

Related posts

டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை